Sparkling Century by C.M !
எதிர்பார்த்தது போலவே சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி, திரையிடப்பட்ட 4 வாரங்களில் வசூல் சாதனை படைத்து இன்று நூறாவது நாள் என்ற வெற்றி இலக்கை தொட்டிருக்கிறது !!! 'பாபா' அடைந்த சூப்பர் தோல்வியை இந்த அபார ஓட்டம் மறக்கடிக்க செய்து விட்டது ! "தலைவரின்" ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் (என்ன, ராம்கி, ஐகாரஸ், மாயவரத்தான், சரி தானே ?) இருக்கிறார்கள் !
ரஜினி தமிழ் திரையுலகில் ஒரு PHENOMENON என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது ! பாபாவில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி' மூலம் விஸ்வரூபம் எடுத்து தான் (மட்டுமே!) சேம்பியன் மெட்டிரீயல் என்று ரஜினி பலருக்கும் உணர்த்தியிருக்கிறார் ! கிரிக்கெட்டுக்கு ஒரு சச்சின், டென்னிஸ¤க்கு ஒரு பீட் சாம்ப்ராஸ் போல, தமிழ் திரையுலகிற்கு ஒரு சூப்பர் ஸ்டார் தான் அன்றும், இன்றும், என்றும் !!!
"ஜக்குபாய்" கதையை நிராகரித்து, 'ரஜினி பார்முலா' படங்களிலிருந்து சற்றே மாறுபட்ட சந்திரமுகியை தைரியமாக தேர்வு செய்து நடித்து அப்படம் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம், இனி வரும் படங்களில் சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க (தற்போது அமிதாப் நடிப்பது போல) சூப்பர் ஸ்டார் முன் வந்தால், அது அவர் திரையுலக வாழ்வில் மற்றுமொரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை !!! இன்றும் நினைவில் நிற்கும் படங்கள் அவர் நடித்த முள்ளும் மலரும், இளமை ஊஞ்சலாடுகிறது, புவனா ஒரு கேள்விக்குறி, மூன்று முடிச்சு ஆகியவை தானே !!!
மற்ற ரஜினி படங்கள் போல் அல்லாமல், சந்திரமுகியில் கதைக்கு (ரஜினியை விட!) அதிக முக்கியத்துவம் இருந்தது. பாபாவைத் தொடர்ந்த 3 வருட இடைவெளியும் ரஜினியை திரையில் காணவேண்டும் என்ற ஆவலை மக்களிடையே அதிகப்படுத்தி இருந்தது ! ரஜினியின் 'படையப்பா' சந்திரமுகியைக் காட்டிலும் சுவாரசியமாக (ரம்யா கிருஷ்ணனின் பாத்திர வடிவமைப்பும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்!) எடுக்கப்பட்டிருந்தாலும், படையப்பா அதன் முழு ஓட்டத்தில் திரட்டிய வசூலை, சந்திரமுகி நான்கே வாரங்களில் மிஞ்சி விட்டது என்பது ஓர் ஆச்சரியமான செய்தி !!!
அந்நியன் வசூலில் சந்திரமுகியை முந்துமா என்ற கேள்விக்கு ஓர் எளிமையான பதிலிருக்கிறது !!! அதாவது, "சான்ஸே இல்லை" என்பது தான் :) அந்நியன், 'இந்தியன்', 'முதல்வன்' ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து வந்த மற்றுமொரு (பிரும்மாண்டத்தையும், கருட புராணத்தையும், மல்ட்டிபிள் ஸ்பிலிட் gimmick-களையும் நம்பி வந்த !) ஸ்டீரியோடைப் சங்கர் படம் ! இது தான் அந்நியனுக்கான ஒரு வரி விமர்சனம் !!!!! சந்திரமுகியும் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி குறித்த படம் தான் ! ஆனால், அது ஒரு "ரஜினி" படம் :)
இறுதியாக ஒரு கொசுறுச் செய்தி! ரஜினியின் அடுத்த படத்தை பூர்ணசந்திர ராவ் தயாரிக்கிறார். பி.வாசு தான் மறுபடியும் இயக்கப் போகிறார். ரஜினியின் முதல் ஹிந்திப் படமான அந்தாகானூனை தயாரித்தவர் ராவ் தான். அப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் பெற்ற சம்பளம், அதிகமில்லை ஜென்டில்மென், 7 லட்சம் தான் !!!!!!!!!!!!!!!!!
நன்றி: ரஜினி ராம்கி! (புரியும் என்று நினைக்கிறேன்!)
என்றென்றும் அன்புடன்
பாலா
6 மறுமொழிகள்:
//நன்றி: ரஜினி ராம்கி! (புரியும் என்று நினைக்கிறேன்!)//
புரியலை. அது இருக்கட்டும் அண்ணாச்சி, எங்க சுத்தினாலும் கரெக்டா சம்பள மேட்டர்லேயே வந்து நிக்குறீங்களே.. சரியான பைசா பார்ட்டிதான்!
ரஜினிபற்றி எழுதிய அன்புடன்பாலா அவர்கள் வாழ்க.
அழகான பதிவு.
நீங்க சொன்னா மாதிரி தலைவர் படம் சீக்கிரம் வந்தா உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு.(முத்து ல வர மாதிரி தீபாவளீ பரிசு எல்லாம் தர முடியாது).
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாய் (1933 முதல் 2005 வரை) உலகம் முழுதும் 156 திரையரங்குகளில் 100வது நாள்.
தனது சாதனையை தானே தகர்த்துள்ளார் ரஜினி ( முந்தய சாதனை படையப்பா 139 திரையரங்குகளில் 100வது நாள்)
ஆனால் ஒரு திரைப்படத்தை ரசிகர்களால் மட்டுமே 100 நாட்கள் கடந்து ஓட்ட முடியாது. பொது மக்களும் Repeated Audience என்று சொல்லக் கூடிய சாதாரண மக்களும்தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை
ramki, கருப்பு, Raja Ramadass, Gopi,
ungkaL karuththukkaLukku nanRi !!!
தலப்பப் பார்த்துப் புட்டு என்னமோ ஏதோன்னு ஓடியாந்தேன்...
நல்ல அலசல்.
காதலுக்குரிய கறுப்பு ராசகுமாரனோட போட்டோவும் நல்லாத்தேன் இருக்கு.
கலக்குங்க...
சுதர்சன்.கோபால்
Post a Comment